
வெற்றி என்பது சிகரமில்லை,
தோல்வி என்பது மரணமில்லை;
எழுந்தவன் எல்லாம் நடப்பதில்லை,
விழுந்தவன் எல்லாம் கிடப்பதில்லை;
விழுந்தவன் எழுந்து தடம் பதிக்க,
இமயம் இறங்கி கை கொடுக்கும்;
வென்றவன் அங்கே செருக்குற்றால்,
விடமென்று அவனை ஒதுக்கி வைக்கும்;
தோல்விகள் வெற்றியின் படிகள் அல்ல,
நம் முயற்சியின் வலிமை சொல்லும் அளவுகோல்;
வெற்றியின் அரியணை ஏற,
தோல்வியை ஆயுதமாக்கு;
ஆயுதங்கள் வென்றிட,
முயற்சிகள் திண்மையாக்கு;
மாவீரன் என போராடு,
அரியணை உனக்கே கொண்டாடு!
7 comments:
i liked tis one very much da... very inspiring... doing great... keep it up...
Jegadheesh simply super..grt
Thank you very much.... May i know your name?
En pangirrku,,,Thamizhil ulladhu oru Aayidha eluththu..
Un kavidhayil ullavai aayudha eluthukaal... Kavidhai Arumai.
Thn
Kavingarey unga kavidhaya yaaravadhu paraatuna,,nandri mattum sollunga,,avunga peru ellam edhuku...
ippadyku ungal nanban :)
உங்கள் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி தோழரே...
உங்கள் அறிவுரையை மதித்து,
இனி யாரிடமும் நிச்சயம் பெயர் கேட்க மாட்டேன் என உறுதி கூறுகிறேன்.....
hai jai, this is janu....your poem ...........super...........very motivational.........keep it up.......
Thanks akka........ This really encourages me!
Post a Comment