Friday, November 21, 2008

முதல் புள்ளியில்

இதயங்கள் ஒன்றாகும்,
இமைகள் இரண்டாகும்;
கனவுகள் உண்டாகும்,
கவிதைகள் என்றாகும்;
பார்த்து சலித்த தோற்றத்திலே,
பார்வையின் விதம் வேறாகும்;
பாதங்கள் நடக்கும் பலதூரம்,
வலியின்றி கடக்கும் மறு ஓரம்;
எண்ணங்கள் எல்லாம் இடம் மாறும்,
கவனங்கள் மட்டும் தடுமாறும்;
வெறுத்தவை கூட அழகாகும்,
இனித்தவை இன்னும் அழகாகும்;

இத்தனையும் நிரம்பி வழியும்
உலகமயமாக்கலின் முதற்புள்ளியான
என் ஒருதலைக் காதலில்...

4 comments:

Anonymous said...

What to tell other than good,Superb,Fantastic,Excellent.... One more diamond in ur crown..

UR's,
FRIEND,

ஜகன் said...

உங்கள் கருத்து/பாராட்டுக்கு மிக மிக நன்றி...

ஆனாலும், கிரீடம் என்றெல்லாம் சொல்லிக்கொள்ள இன்னும் காலம்/எல்லைகள் இருப்பதே உண்மை.....

எனினும் மீண்டும் ஒரு முறை நன்றி...

Anonymous said...

ஒருதலைக் காதலின் இனிமையான விள்க்கம். Really Superb!!! நெஞ்ச நக்கீட்டீங்க!!

ஜகன் said...

@ Rejeesh,

நிரம்ப நன்றி....
நான் வேனா வேற சட்டை வாங்கி தரட்டுமா....?