
எழுந்துவிட்ட அதிகாலை,
எழுப்பிவிட்ட கடிகாரம்,
காத்திருக்கும் கடமை,
இன்னும் உறங்கும் நண்பன்,
சர்க்கரை அதிகமாய் என்றுகேட்டு வாங்கி குடிக்கும் வீட்டு முற்றத்தின் கடைத்தேநீர்,
இயந்திரம் தந்த இதமான வெந்நீர்,
விரும்பிய இசைபாடும் குறுவட்டு,
சுகமாய் பயணிக்க காத்திருக்கும் வாகனம்,
இரவு சந்திப்போமா என்ற ஏக்கத்துடன் படுத்திருந்த மெத்தை,
எனக்கென்றே காத்திருக்கும் வாழ்வின் புத்தம் புது நாள்,
இத்தனை இருந்தும் ஏதோ இழப்பதாய் உணர்வு,
இரவு எப்போது வரும் என்று ஏங்குகிறேன்,
நாளைய காலையின் விழிப்பிலாவது
தாயின் , “மணி எட்டு ஆச்சு இன்னும் தூக்கத்த பாரு” எனும் குரல் கேட்காதா
என்ற எதிர்பார்ப்போடு…..
இங்ஙனம்,
பாசத்தைக்கூட தவணை முறையில் பெறும்,
மென்பொருள் வல்லுனன்.
12 comments:
இன்றைய சூழளில் எல்லா மென்பொருள் வல்லுனனின் மனதிலும் ஓடிகொண்டிருக்கும் ஒரு அழகிய உண்மை.....
உங்கள் கருத்துக்கு நன்றி!
missing that life.........
Me too... This is really from experience...
i read all kavithai........very nice........keep it up...all the very best for ur future
Thanks a ton..... I will try my best and thank you once again!
Good one....keep it up....
முழுக்க படித்து விமர்சனம் செய்த்ததற்கு நன்றி...
தொடர்ந்து ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன்!
Superb...மென்பொருள் வல்லுனரின் தீராத ஏக்கம்!!
@ Rejeesh,
மிக மிக நன்றி...
Good one.
நன்றி !
Post a Comment