விடுதலை முழக்கமிட காணிநிலம் வேண்டுமென,
எங்களின் புனிதப் பயணம் இது!
துப்பாகியின் தோட்டாக்கள் - எங்கள்
தூதுவப் போராளிகள்;
குண்டு உமிழும் பீரங்கிகள் - எங்கள்
தெருக்களின் ஏர் கலப்பைகள்;
நெற்பயிர்களுக்கு பதில் உயிர்ப்பயிர்களை
விதைத்து வருகிறோம்...
சுதந்திரப்பூ என நிச்சயம் விளையும்
ஒரு நாள் அவை!
வீதிகளில் மண் தோண்டி விளையாடும்
மழலையரின் நகக்கண்களில் சதைத்துணுக்கும்,
தீண்டத்தகாதவராய் சித்தரிக்கப்படும்
தியாகப்போராளிகளின் திரைமறை வாழ்வும்,
அடிமை இருள் படிந்த எங்கள் குலமும்,
நிச்சயம் மாறும் ஒரு விடியலில்...
அன்றைய ஆதவன் விடுதலை ஒளியை
பரவ விடுவான் எங்கள் வழிகளில்!!!
4 comments:
முற்பிரவியில் நீர் என்ன சுப்ரமனிய பாரதியா?
பெருமிதத்துடன்,
இள்மதி.
உங்கள் பாராட்டு எப்பொழுதும் என்னை ஊக்கப்படுத்துவதாகவே உள்ளது....
இருப்பினும், இந்த ஒப்பீடு கொஞ்சம் அதிகம் என்றே நினைக்கிறேன்.....
எதுவாயினும், மிக்க நன்றி!!!!
உணர்ச்சி பூர்வமான கவிதை. நீர் ஓர் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன். ஆனால் சுப்ரமனிய பாரதி, கொஞ்சம் இல்லை மிக மிக அதிகம்.
@ Rejeesh,
உங்கள் கருத்தை நான் வழி மொழிகிறேன்...
Post a Comment