உடனோர் துணையும் மகிழ்வோ டுரையும்
இடர்க்கோர் திரையும் மனங்கொள் மடலும்
தோழைமையொ டன்பும் மதிப்பி லிசையா
கவிதைநிகர் பேர்பொன் குடகு...
----------------------------------------------------------------------
விளக்கம்:
கவிதை போன்று ரம்மியமான நீண்டு உயர்ந்த குடகின் மலைகளை பொன்னால் செய்தால் எப்படி மதிப்பிட இயலாதோ,
அதுபோல்
மனிதரின் வாழ்க்கையில்,
வாழ்க்கை முழுவதும் உடன் வர ஒரு துணையும்,
அவர்களோடு ஏற்படும் இனிமையான உரையாடலும்,
துன்பத்தை காட்டாது மறைக்க ஒரு திரையும்,
ஒருவர் மனம் திறந்து எழுதிய கடிதமும்,
நல்ல நட்பும், அன்பும்
மதிப்பிட முடியாதது ஆகும்
6 comments:
Am telling first time this to u..
Enaku puriyala...
உங்களுடைய கவிதை பாதையில் ஓர் மைல் கல்!! அசத்தீட்டிங்க!!
@ Anonymous,
ஆர்வக்கோளாறோ, அதிகப் பிரசங்கித்தனமாகவோ இருந்தால் மன்னிக்கவும்!
விளக்கம் போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.........
@ Rejeesh,
நீங்க கருத்திலேயே அசத்திட்டீங்க.... நன்றி !
விளக்கத்திற்கு நன்றி..அருமை!!!
nice jegadheesh...keep it up
@SUN,
உங்கள் கருத்துக்கு நன்றி.....
Post a Comment