Saturday, September 27, 2008

சிலேடை II - மானும் கண்ணும்

புள்ளிகளாய் உற்றிருக்கும் யாக்கை யினில்பின்
நொடிக்கோ ரிடமாய்ப் பறந்திடும்வே கந்தனில்
கேடயமாய் மேலில் வளர்மென் சிறுநீளக்
காம்புகள் காக்கும் இடர்.

4 comments:

Veroniq S Guptha said...

தொடுக்கப்பட்ட வெண்பாக்கள் அனைத்தும் அருமை.

தங்கள் கற்பனைப் புலமைக்கு என் சலாம்.

ஜகன் said...

உங்கள் ஆதரவு எனக்கு ஊக்கம் தருகிறது!!
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி....

Anonymous said...

மிகவும் அழகாக உவமை படுத்தியுள்ளீர்கள். உமது கற்பனைத்திரன் மேலும் வளர வாழ்த்துக்கள்!!

ஜகன் said...

@ Rejeesh,

கருத்துக்கும், பாராட்டுக்கும் மிக மிக நன்றி