Wednesday, September 17, 2008

உன்னுடன் ஒரு மாலையில்...

வீதியில் நடந்த நமக்கு முன்னால்,
மழலையோடு வந்த தாயைப்பார்த்து
உன்னோடு நான் வருவதாக
உவமைப்படுத்தினாய்...

மிகை என்று மனதில் சிரித்துக்கொண்டேன்;

வழிச்சிறுவர்களோடு கலந்து,
விதிமுறை தெரியாது விளையாடி,
தோல்வி மறைக்க என்னை நடுவராக்கி,
உனக்கே வெற்றி என வாதிட
கெ(கொ)ஞ்சினாயே...

அப்போது தான் உணர்ந்தேன்,
உவமை உண்மை என்று !!!

4 comments:

Anonymous said...

சாதாரணமான நிகழ்சியை மிகவும் அழகாக சித்தரித்துள்ளீர். Great thinking..

ஜகன் said...

@ Rejeesh,

அது தானே என் பகுதி நேர வேலை...
எனினும் மிக்க நன்றி!

Rudhra said...

nice one...

ஜகன் said...

நன்றி !!! :)