Friday, May 15, 2009

தன்னம்பிக்கை

முயல விழையா மனமும்
முடங்கி நிற்கும் உடலும்
முன்முதல் எதிரிகள்...

தோல்வி ஏற்கும் குணமும்
மீண்டும் முயலும் பலமும்
தலையென்றிருக்கும் தோழைமை...

நல்வன செழித்தும் தீயன அழித்தும்
உலகினை செலுத்தும் பேராண்மையாய்,

எதிரியை விட சூளும்
தோழர்க்கு தோளுமென
இயைந்து நடந்தால்
ஈதல்குணம் மறுக்காது வெற்றிகள்...!

4 comments:

Anonymous said...

உனது ஒவ்வொரு முயற்சியும் வெற்றியாகட்டும்

YUVA said...

satharnamave naan ellathalayum thappu kandu pudipen, ithule nee vera epdi irukune ketutiya, sollava venum.

there is a word called நல்லன, you mentioned something different.

முன்முதல், is this the right usage.

ஜகன் said...

@ Anonymous,

உங்கள் வாழ்த்து / ஆசிக்கு நன்றி... :-)


@ YUVA,

1. நீங்க ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிக்கும் அளவுக்கு, விஷயம் இருக்குதானு முதல்ல பாருங்க...

2. இருந்தா, தாராளமா கண்டுபிடிச்சி எனக்கும் சொல்லுங்க...

3. நீங்க கண்டுபிடிச்ச வார்த்தை "நல்லன". ஆனா உண்மையில் அது "நல்வன". இது என் அறிவுக்கு எட்டியவரை சரியான வார்த்தை தான். கூடிய விரைவில், அத்தாட்சி சமர்ப்பிக்கிறேன்.

4. "முன்முதல்" என்பது என்னுடைய சொந்த முயற்சி.
பொருள்: வரிசையில், முன்னால் இருக்கும் பொருள் / விஷயம், முதலில் தான் இருக்கும் என்பது மரபு.
அதன்படி, இந்த வார்த்தையை நான் சொல்லி இருக்கிறேன்.

எனினும் உங்கள் விமர்சனத்துக்கு நன்றி !

YUVA said...

enna jegan, romba naala ethuvum eluthalaiya,
time ilaya, summa eluthu, athan naa iruken illa padikirathuku.