துன்பம் கண்டு துவள்வெதெல்லாம்
வீணர்கள் இயலாமை!
இருள் வருவது எல்லாம் இமைகள் மூடித்தான்;
உலகம் என்றும் திறந்தே இருக்கிறது...
உணர்ந்து நீயும் அதனில் இன்புற,
கண்கள் திறந்திடு,
கவலை துறந்திடு,
துன்பம் மறந்திடு,
வழிகள் தேர்ந்தெடு,
முயற்சியின் அம்பு தொடு,
வெற்றியின் இலக்கு தொடு,
துயரத்தின் இருளில்
மகிழ்ச்சி வெள்ளம் பரவ விடு;
வாழ்வின் காலம் முற்றும் மட்டும்,
துயரம் என்பது மட்டும் மட்டும்,
தொடாத தூரம் எட்டும் எட்டும்...
6 comments:
gs self motivation...good jegadheesh.....keep it up..
Proud to have such comments!
Simple and Superb...
உங்கள் வருகைக்கு நன்றி!
உங்கள் பாராட்டுக்கு இன்னும் ஒரு நன்றி!!
மனிதராய் பிறந்த ஒவொருவரும் உணர வேண்டிய உண்மை. Great da!
@ Rejeesh,
கருத்தை வழிமொழிந்து ஏற்றுக் கொள்கிறேன்...
Post a Comment